தமிழக அரசுக்கு, கனடியத் தமிழர் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகள்

ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை  அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு வழங்குவதாக,  2021 பெப்ரவரி 22 அன்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றினை கனடியத் தமிழர் பேரவை வெளியிட்டு உள்ளது.

இதற்காகத், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி,  தமிழ் மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பண்டியராஜன் மற்றும் தமிழ் நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட, அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை உள உவகையுடன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த நிதியுதவியைத் தமிழக அரசிடமிருந்து பெறுவதைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைவருக்கும், இந்தச் சந்தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

University of Toronto Tamil Chair grows closer to ground breaking goal

Tamil Chair Inc. and the Canadian Tamil Congress have pledged to raise the necessary funds from the Tamil community, with the groups already raising $1.5 million of the $3 million endowment fund required.  

After Harvard, the University of Toronto to institute a Tamil Chair

The group’s passionate love for the language, one of the longest-surviving classical languages in the world, the others being Greek, Sanskrit, Latin, Hebrew, Persian, and Chinese, has now resulted in this initiative. While two doctors, cardiologist Dr Vijay Janakiraman and oncologist Dr Sundaresan Sambandam, were the ones who made initial donations to establish the Tamil Chair at Harvard, Sivan shares that as far as the Toronto Tamil Chair is concerned, it is the first time two not for profit organisations have come forward to initiate the Toronto Tamil chair.

University of Toronto Chair in Tamil Studies

University of Toronto Scarborough, Tamil Chair Inc. and the Canadian Tamil Congress announce $1.36 M raised on 2nd Anniversary of the Tamil Chair Launch.

Anbudan Thamil – Tamil with Love

Did you know Tamil is widely considered as one of the oldest languages still spoken by over 80 million people in the world today? Despite this history, it is one of the least researched and academically explored languages in a higher learning institution.
To advance the global understanding of the Tamil language, Tamil Chair Inc. and Canadian Tamil Congress have signed an agreement with the University of Toronto to create a Tamil Chair. As Toronto is home to one of the largest diasporic Tamil populations outside of India, it is a natural decision to house the project at the University of Toronto-Scarborough campus.

கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது பெற்றார் இசையமைப்பாளர் இமான்

கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது. கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் முதன் முறையாக 21 ஜனவரி மாலை அன்று தமிழ் மரபுத் தினத்தை கொண்டாடியது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபு தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை என்று சொல்லலாம்.

U of T event celebrates Tamil community, raises money for research chair

As a volunteer teacher, Tharscika Ramaneekaran remembers a student telling her why she wanted to learn Tamil – she could not understand her grandparents. Tamil is one of the world's oldest languages is spoken by more than 80 million people. But after thousands of years, many physical copies of its rich literature and history are now gone. Ramaneekaran, a third-year biochemistry student, said this is why having a chair in Tamil studies at University of Toronto Scarborough is so important...

இசையமைப்பாளர் இமானுக்கு விருது! - கனடாவின் டோராண்டோ பல்கலைக்கழகம் கௌரவம்

"கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகம் முதன் முறையாக ஜனவரி 21 மாலை அன்று தமிழ் மரபுத் தினத்தை கொண்டாடியது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபுத் தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை..."

Toronto's Tamil community gathers for special event in Scarborough

December event raised $90,000 for University of Toronto Chair in Tamil Studies

There is much to be learned from Tamil literature and culture, whose origins and rich evolution has spanned more than 3,000 years. Indeed, the words of the ancient Tamil poet Kaniyan Pungundranar, “To us all towns are one, all persons our kin,” embody the concepts promulgated by the United Nations and the foundational principles of modern-day globalization.
Tamil is the oldest living classical language in the world. There are close to 80 million Tamil-speaking individuals in the world, of whom about 300,000 reside in Canada. The need for academic institutions to promote research and studies in Tamil and to provide global recognition and awareness...

 

A chair in Tamil Studies at U of T marks the community’s coming of age

Appadurai Muttulingam is proud his mother tongue is one of the world’s seven classical languages, but the Markham writer always worries how the centuries-old Tamil language and literature can be preserved without a home.
That’s why he was thrilled when the University of Toronto joined the Tamil community in the GTA earlier this year to create a chair in Tamil Studies at its Scarborough campus with the mandate to develop an academic program on Tamil language, history and culture through research and scholarship.

Toronto Tamil community raising funds for UTSC chair in Tamil Studies

$700,000 collected so far, $3 million pledged

A campaign launch held at UTSC on June 25 saw people from all over the Tamil community in Canada and the United States come together to raise $700,000. The money that is being raised will set up a permanent endowment fund for the chair of Tamil Studies at U of T, who would have a focus on studying ancient to modern Tamil literature.
The impetus comes from the Canadian Tamil Congress (CTC), a non-profit organization that works to represent Tamil interests in Canada and abroad. This effort to establish a chair is being led by CTC Vice-President Sivan Ilangko...

Around $100,000 raised at Isaiyarangam music event for University of Toronto Tamil Chair

The Tamil Chair will promote Tamil language, Research, Studies and culture

Tamil has been considered over the years as one of the oldest languages in the world abundantly rich with culture, tradition and civilization. Poet Bharathiyars dream of spreading the Tami language around the world is now becoming a reality in North America. The establishment of a Tamil Chair by the University of Toronto follows in the footsteps of a newly created Tamil Chair at another world class University, namely the Harvard University in Cambridge, USA. A sum of $6 million was raised recently throughout the world for the Harvard University Tamil Chair.

மருத்துவர் போல் ஜோசப் அவர்களின் இரு நூல்கள் 14 ஒக்ரோபர் 2018 அன்று மாலை ரொறொன்ரோவில் வெளியிடப்பட்டன. சமீபத்தில் நடந்தவெளியீட்டு விழாக்களில் என்னை மிகவும் கவர்ந்த விழா இது. ’நலம் நலமறிய ஆவல்’ ‘அகவிதைகள்’ ஆகிய இருநூல்கள் வெளியிப்பட்டன. இந்தநூல்களை அறிமுகம் செய்தவர்களும், ஆய்வுரை ஆற்றியவர்களும் தம் கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்து முடித்தனர். திரு பொன்னையாவிவேகானந்தன் தன் உரையின்போது ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். வருகையாளர்களில்பலர் தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கி தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் ஒக்ரோபர் 11ம் தேதி மாலை ’கம்பரின்கவிநயம்’ என்ற தலைப்பில் ரொறொன்ரோவில் உரையாற்றினார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசினார். என் வாழ்வில் நான் கேட்ட மிகச்சிறந்த உரைகளில் இதுவும் ஒன்று எனச் சொல்லலாம். பேச்சின் நடுவே ரொறொன்ரோ தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தமிழ் இருக்கை முதன்முதலாக அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் 1929ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தகுந்த பேராசிரியர் ஒருவரை தமிழ் இருக்கைக்கு நியமிப்பதற்கு பெரும் தேடுதல்நடந்தது. இறுதியில் விபுலாநந்த அடிகள்தான் இதற்கு உகந்தவர் எனத் தீர்மானித்து அவரை நியமித்தார்கள். முதலாவது தமிழ் இருக்கைபேராசிரியர் ஓர் ஈழத்தவர் என்பது பெருமைக்குரியது. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரொறொன்ரோ தமிழ் இருக்கையின் வெற்றிக்குபாடுபடவேண்டும் என்றார். அவருடைய உணர்ச்சி மயமான பேச்சில் மனதைப் பறிகொடுத்தவர்கள் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்குநன்கொடை வழங்கினார்கள். ஏறக்குறைய 4000 டொலர்கள் அன்று சேர்ந்தன.

ரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பரப்பிய இரண்டாயிரம் வருடப் பெருமிதம்!

விழாவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகம். இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியே நடத்தப்படும் தெருவிழாக்களுள் பிரமாண்டமானதும் பிரமிப்பானதுமான சாதனை விழா, இந்தத் தமிழர் விழாதான்.

நாலாவது வருடமாக, 2018 ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் தமிழர் `தெரு’ விழா ரொறொன்ரோவில் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது. கனடாவில் தமிழர்கள் பெருந்தொகையாக வசிக்கும் நகரங்கள் ஸ்காபரோவும் மார்க்கமும் ஆகும். மார்க்கம் நகரில்தான் சென்ற வருடம், ஈழத்தமிழர்களின் விடுதலை களமாக விளங்கிய வன்னி பிரதேசத்தை நினைவூட்டும் விதமாக `வன்னி வீதி’ திறக்கப்பட்டது. ஸ்காபரோ நகரத்தின் பிரதிநிதியாகிய கரி ஆனந்தசங்கரிதான் கனடாவில் தை மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாக நாடாளுமன்ற மசோதா மூலம் ஏகமனதாக நிறைவேற்றக் காரணமானவர்.

CTV Your Morning with Graham Richardson.

Why U of T wants to hire a chair of Tamil Studies.

Sivan Ilangko, vice-president of the Canadian Tamil Congress joins us to explain why this is indeed, what other big universities are doing and what it would mean for the community.

University of Toronto Scarborough gets $3-million Tamil studies pledge

Canadian Tamil Congress calls for 'global effort' on funds

University of Toronto Scarborough is on its way to getting a permanent Tamil studies program after a $3-million pledge from the Canadian Tamil Congress and a U.S.-based group

A Tamil studies chair in UTSC would be the first in Canada. The Scarborough-based congress and Tamil Chair Inc. say they’ll try raising the money over two years.

CBC Radio's Metro Morning with Matt Galloway

Chair in Tamil studies at U of T

The Tamil community is raising money to have a Chair in Tamil Studies at the University of Toronto Scarborough. Sivan Ilangko, vice-president of the Canadian Tamil Congress, talks about what this means to the community.

Tamil Mirror

University of Toronto announces the establishment of Chair in Tamil Studies

On June 25 2018, Prof Bruce Kidd, Vice President of University of Toronto and the Principal of Scarborough Campus announced that the University of Toronto had agreed to establish a Chair in Tamil Studies at an elegant dinner event hosted by the University. The announcement and dinner event was attended by over 200 guests from the Tamil community from Canada and USA.

The agreement signed by Tamil Chair Inc. USA and the Canadian Tamil Congress with the University of Toronto pledges a creation of a $3,000,000 endowment fund in support of a Chair in Tamil Studies.

ஹார்வர்டைத் தொடர்ந்து டொரான்டோவிலும் தமிழ் இருக்கை!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றியைத் தொடர்ந்து,

டொரான்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். பல வருடங்களாக டொரான்டோவில் ஒரு தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்ற அவர்களது விருப்பம் இப்போது நிறைவேறியிருக்கிறது. ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பினரே முன்னின்று, கனடா தமிழ்ப் பேரவையுடன் இணைந்து இதை நடத்தியது பாராட்டுக்குரியது. மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வந்து, நன்கொடை கொடுத்து விழாவைத் தொடக்கிவைத்தனர்.

BBC Tamil coverage of the event

கனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை'

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார்.

U Of T News

Group pledges $3-million to U of T for chair in Tamil studies

A group from the Tamil community in Canada and the United States is teaming up to pledge $3-million to create a chair in Tamil studies at the University of Toronto Scarborough.

The pledge, made by Tamil Chair Inc. and the Canadian Tamil Congress, includes raising funds to support an endowment for a full-time chair position that will explore aspects of Tamil language, history and culture through research and scholarship.